லேடி காகா சிங்கப்பூர் வருகிறார்
Jordan Strauss/Invision/AP, File
This audio is generated by an AI tool.
அமெரிக்கப் பாடகியான லேடி காகா (Lady Gaga) சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.
சிங்கப்பூர் தேசிய அரங்கில் வரும் மே மாதம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
மே 18,19,21,24 ஆகிய தேதிகளில் அவர் 4 நிகழ்ச்சிகளை நடத்துவார்.
நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளின் விற்பனை இம்மாதம் (மார்ச்) 18ஆம் தேதி தொடங்கும்.
விற்பனையை ticketmaster.sg, Mastercard, Klook, KrisFlyer போன்ற தளங்களில் எதிர்பார்க்கலாம்.
லேடி காகா கடைசியாக 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
Born This Way Ball Tour-இன் கீழ் அவர் சிங்கப்பூரில் அதை நிகழ்த்தினார்.
லேடி காகா 'Mayhem' எனப்படும் 7ஆவது இசைத்தொகுப்பை இம்மாதம் 7ஆம் தேதி வெளியிட்டார்.