Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லேடி காகா நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டை வாங்க ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வரிசையில்

வாசிப்புநேரம் -

அமெரிக்கப் பாடகியான லேடி காகா (Lady Gaga) இசைநிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டை வாங்க ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் காத்திருந்தனர்.

சிங்கப்பூரில் மே மாதம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு இன்று (18 மார்ச்) முதல் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

Mastercard அட்டையைப் பயன்படுத்துவோர் குறிப்பாக இன்று நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

இணையத்தளத்தில் காலை 10 மணிக்கு விற்பனைத் தொடங்கிய சற்று நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வரிசையில் இருந்தனர்.

நுழைவுச்சீட்டுகள் 140 வெள்ளி முதல் விற்பனையாகின்றன. ஆக விலையுயர்ந்த நுழைவுச்சீட்டுகளின் மதிப்பு 1,300 வெள்ளிக்கும் மேல்.

நுழைவுச்சீட்டுகளை வாங்கும் வாய்ப்பைப் பெற்ற சிலர் மறுவிற்பனையையும் தொடங்கிவிட்டனர்.

இணையவர்த்தகத் தளங்களில் VIP நுழைவுச்சீட்டுகள் 2,700 வெள்ளிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதைக் காணமுடிகிறது.

லேடி காகா மே மாதம் 18,19, 21, 24 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நிகழ்ச்சி நடத்துவார்.

ஆசியாவில் அவர் நிகழ்ச்சி நடத்தும் ஒரே இடம் சிங்கப்பூர்.

வெளிநாட்டவரும் நுழைவுச்சீட்டுகளை வாங்க முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Others/8World

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்