லாபநோக்கமற்ற புதிய தனியார் மருத்துவமனை விரைவில்
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அரசாங்கம் புதிய தனியார் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கத் திட்டமிடுகிறது.
நிலப் பகுதிக்கான குத்தகை விரைவில் அறிவிக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைக்காக அரசாங்கம் நிலம் ஒதுக்குவது 20 ஆண்டுகளில் இது முதல்முறையாக இருக்கும்.
புதிய மருத்துவமனையில் 300இலிருந்து 400 படுக்கைகளுக்கு வசதி அமைக்கப்படும்.
லாபத்துக்காக அல்லாமல் குறைந்த விலையில் சேவை வழங்கும் வகையில் மருத்துவமனை இயங்கும் என்று அமைச்சர் கூறினார்.
குத்தகையில் அதற்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றார் அவர்.
நிலத்தின் விலையை மட்டும் கருத்திற்கொள்ளாமல், பராமரிப்புக் கட்டமைப்பு, சிக்கனம், ஆள்சேர்ப்புத் திட்டங்கள், கட்டுப்படியான சேவையை வழங்கக் கடப்பாடு போன்ற அம்சங்களிலும் குத்தகைதாரர்கள் கவனம் செலுத்தவேண்டியிருக்கும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.