Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் Grand Prix - McLaren ஓட்டுநர் நோரிஸுக்கு முன்னணி இடம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் Grand Prix - McLaren ஓட்டுநர் நோரிஸுக்கு முன்னணி இடம்

CNA/Raydza Rahman

சிங்கப்பூர் Grand Prix F1 கார்ப்பந்தயத்தில் McLaren கார் ஓட்டுநர் லென்டோ நோரிஸ் (Lando Norris) முன்னணி இடம் பிடித்தார்.

நேற்றிரவு (21 செப்டம்பர்) நடைபெற்ற தகுதிச் சுற்றில் அவர் RedBullஇன் மாக்ஸ் வெர்ஸ்டாப்பெனைப் (Max Verstappen) பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்தார்.

Mercedes கார்களை ஓட்டும் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) மூன்றாம் இடத்திலும் ஜார்ஜ் ரசல் (George Russell) நான்காம் இடத்திலும் வந்தனர்.

கடந்த ஆண்டின் சிங்கப்பூர் Formula One Grand Prix கார்ப்பந்தயத்தில் வெற்றி பெற்ற Ferrari ஓட்டுநர் கார்லோஸ் செயின்ஸ் (Carlos Sainz) 10ஆம் இடத்தில் வந்தார்.

அவர் தகுதிச் சுற்றின் இறுதிக்கட்டத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது தடுப்புகள் மீது மோதியதால் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

F1 கார்ப்பந்தயங்களில் நோரிஸ் இவ்வாறு முன்னணி இடம் பிடித்திருப்பது இது 6ஆவது முறை.

அவர் பங்கேற்ற கடைசி 4 பந்தயங்களில் 3இல் முன்னணி இடம் பிடித்திருக்கிறார்.

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்