வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கணினி வழங்கும் SGBono
வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கணினி வழங்கும் SGBono

வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கணினி வழங்கவிருப்பதாக SGBono தொண்டூழிய அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், உயர்கல்வி நிலையங்களும் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 8) முதல் வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறவிருக்கின்றன.
அந்தக் காலக்கட்டத்தில் மாணவர்கள் பாடம் பயில வீட்டில் மடிக்கணினி அல்லது கணினி கட்டாயமாகத் தேவைப்படும்.
அதனால் வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக SGBono தொண்டூழிய அமைப்பு மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.
CHAS நீல நிறத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கணினிகள் கொடுக்கப்படும் என்று SGBono அமைப்பு தெரிவித்தது.
மேல் விவரங்களுக்கு http://sgbono.org என்ற இணையத்தை நாடலாம் அல்லது +65 87673236. என்ற எண்ணிற்கு Whatsapp செய்யலாம் என்று அமைப்பு கூறியது.