புக்கிட் பாத்தோக்கில் கனத்த மழை - மரம் விழுந்து கார் நொறுங்கியது
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் (Bukit Batok) வட்டாரத்தில் நேற்றிரவு (15 பிப்ரவரி) பெரிய மரமொன்று கார் மீது விழுந்தது.
காரில் யாரும் இல்லையென்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 4இல் இருக்கும் புளோக் 271இல் இரவு சுமார் 10 மணிக்குச் சம்பவம் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மழை பெய்த பின்பு மரம் விழுந்தது.
கார் அங்கிருந்து அகற்றப்பட்டது. மரம் விழுந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது.
நேற்று தீவின் வடக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்திருந்தது.

ஆதாரம் : Others/8 World