Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

கரும்பில் உருவான ஆகப்பெரிய ரங்கோலிக் கோலம்...சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில்

வாசிப்புநேரம் -
பீஷான்-சின் மிங் வட்டாரவாசிகள் இணைந்து கரும்பைக் கொண்டு உருவாக்கிய ஆகப்பெரிய ரங்கோலிக் கோலம் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று (16 பிப்ரவரி) பீஷான் சமூக மன்றத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தக நிறுவனம் அதனை உறுதிசெய்தது.

நாடாளுமன்ற உறுப்பினரும் பீஷான்- தோ பாயோ அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகருமான திரு சொங் கீ ஹியோங் (Chong Kee Hiong) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்தச் சான்றிதழைப் பெற்றார்.
படம்: மெலிசா மேனுயல்
பல இனத்தவரும் இந்தியக் கலாசாரத்தை மேலும் தெரிந்துகொள்ள பொங்கல் திருவிழா சிறந்த வாய்ப்பளித்ததாகப் பீஷான் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் குணசேகரன் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

பிற இனத்தவர்கள் சேலையை அணிந்துகொண்டு கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான வட்டாரவாசிகள் உறியடி, பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு போன்ற பல பாரம்பரிய நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர். 

பீஷான் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் பீஷான் ஸ்கை (Bishan Sky) குடியிருப்பாளர் கட்டமைப்பும் ஏற்று நடத்திய பொங்கல் திருவிழா சிறப்பாக நடந்தேறியது.

இதோ காணொளியைக் கண்டு ரசியுங்கள்!
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்