Skip to main content
வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஏட்ரியன் டான் காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஏட்ரியன் டான் காலமானார்

வாசிப்புநேரம் -
வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏட்ரியன் டான் (Adrian Tan) காலமானார்.

TSMP சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்த அவருக்கு வயது 57.

அவர் ஓராண்டுக்கும் மேலாய்ப் புற்றுநோயுடன் போராடினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அது குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தமது LinkedIn பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் வழக்கறிஞர்களின் கட்டொழுங்கை
உயர்த்தவும் வழக்கறிஞர் துறையை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கையைக் குறைக்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மறைந்த ஏட்ரியன் டானின் குடும்பத்திற்கும் அன்புக்குரியவர்களுக்கும் வழக்கறிஞர் சங்கம் அதன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டது.

"அவரது மறைவை வார்த்தைகளால் வருணிக்க இயலாது.
அவரது நினைவுகள் எப்போதும் எங்கள் மனத்தில் நிலைத்து நிற்கும்," என அது கூறியது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்