Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-இந்தியா ஒத்துழைப்பு: "ஒட்டுமொத்த ஆசியாவின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-இந்தியா ஒத்துழைப்பு: "ஒட்டுமொத்த ஆசியாவின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்"

FB/Lawrence Wong

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரும் இந்தியாவும் செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, பகுதி மின்கடத்தி ஆகிய அம்சங்களில் மேலும் எப்படி ஒத்துழைக்கலாம் என்பது குறித்து CII இந்திய தொழில்துறைச் சம்மேளனத்தின் தொழிலதிபர்களுடன் பேசியதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

அது குறித்து அவர் Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அது பொருளியல் ரீதியாக இரு நாடுகளுக்கு மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் ஒட்டுமொத்த ஆசியாவின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் 60ஆம் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியில் தாம் இந்தியாவில் உள்ள சிங்கப்பூரர்களைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் சென்னை, மும்பை என இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அவர் சொன்னார். பகுதி மின்கடத்தி துறையின் தொழிலதிபர்களும் அதற்கு வந்திருந்தனர். அவர்களின் கதைகள் மனத்தை நெகிழ வைத்ததாகத் திரு வோங் கூறினார். அனைவரும் இந்தியாவில் இருந்துகொண்டே சிங்கப்பூருக்குப் பெருமை தேடித்தருவது நம்பிக்கை அளிக்கிறது என்றார் திரு வோங்.

திரு வோங் இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்