மக்களின் கருத்துகளைக் கேட்பேன்; சரியான முடிவை எடுக்கத் தயங்கமாட்டேன்: லாரன்ஸ் வோங்
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Try Sutrisno Foo)
திரு லாரன்ஸ் வோங் நாளை (15 மே) பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
சென்ற வாரம் (10 மே) அவர் செய்தியாளர்களுக்கு ஒரு மணிநேர நேர்காணலை வழங்கியிருந்தார்.
தமது தலைமைத்துவத்தைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குத் திரு வோங் பதிலளித்தார்.
"மக்களின் கருத்துகளைக் கேட்பேன். விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவேன். இறுதியில் முடிவெடுக்கும் பொறுப்பு என் கையில் உள்ளது. முடிவுகள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பேன். சிங்கப்பூரை முன்னோக்கி எடுத்துச் செல்லும் முடிவுகளை எடுக்கவும் சரியானவற்றைச் செய்யவும் தயங்கமாட்டேன்," என்றார் திரு வோங்.
காலப்போக்கில் சிங்கப்பூரர்கள் தமது தலைமைத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்வர் என்று அவர் சொன்னார்.
"பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் என்னால் இயன்றவரை சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றுவேன்," என்று திரு. வோங் கூறினார்.

தொடர்புடையவை:
ஆதாரம் : Others