Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புற்றுநோய் கண்ட பிள்ளைகளுக்கு நிதி திரட்ட, ஒன்றுதிரண்ட 800 மோட்டார் சைக்கிளோட்டிகள்- பாராட்டிய துணைப்பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
புற்றுநோய் கண்ட பிள்ளைகளுக்கு நிதி திரட்ட, ஒன்றுதிரண்ட 800 மோட்டார் சைக்கிளோட்டிகள்- பாராட்டிய துணைப்பிரதமர் வோங்

MCI Photos by Terence Tan/ Facebook Lawrence Wong


The Riders Aid Singapore எனும் அமைப்பைச் சேர்ந்த 800 மோட்டார் சைக்கிளோட்டிகள் இன்று ஒரு நற்செயலில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் கொண்ட இவர்கள், சிங்கப்பூர் சிறார் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினர். அதன் வழி 32,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டது.

துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

MCI Photos by Terence Tan/ Facebook Lawrence Wong
MCI Photos by Terence Tan/ Facebook Lawrence Wong

சிங்கப்பூர் உணர்வை வெளிக்கொண்டுவரும் இத்தகைய முயற்சியில் இணைந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அவர் தமது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்தார்.

பொதுவான ஒரு நற்செயலுக்காக எல்லா நிலையிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஒன்றிணைகின்றனர்.

சமூகத்துக்குத் திரும்பக்கொடுக்க வேண்டும் என்ற இத்தகைய உணர்வு மேலோங்கிவிட்டால் சவால்கள் அனைத்தையும் வாய்ப்புகளாக்கிவிடலாம் என்றார் திரு வோங்.

தாம் மோட்டார்சைக்கிள் ஓட்டி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாகத் திரு வோங் கூறினார்.

மோட்டார்சைக்கிள்களின் கம்பீர அணியில் தொண்டூழியர்களும் மலேசியாவைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்