Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இளையர்களின் குரல் முக்கியம்; அதை அவர்கள் உணரவேண்டும்: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
இளையர்களின் குரல் முக்கியம்; அதை அவர்கள் உணரவேண்டும்: பிரதமர் வோங்

படம்: MDDI

பிரதமர் லாரன்ஸ் வோங் தமது இளையர் தின வாழ்த்துகளை Facebookஇல் பதிவிட்டிருக்கிறார்.

இளையர்களின் கருத்துகள், அவர்கள் எதில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர், எதிர்காலத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை - இவற்றையெல்லாம் தாம் கேட்க விரும்புவதாக அவர் சொன்னார்.

இளையர்களின் குரலைக் கேட்கவும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கவும் அரசாங்கம் பல தளங்களை அமைத்துக்கொடுப்பதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

"இளையர்களின் குரல் முக்கியம். அதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தங்களுக்கும் சிங்கப்பூருக்கும் மேலும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கவேண்டும். அதுவே எங்கள் விருப்பம்," என்றார் அவர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்