தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ளவும் மூத்தோருக்கான புதிய நிலையம்

Google Maps Street View
மூத்தோர் தொழில்நுட்பத்தைத் தயக்கமின்றி பயன்படுத்துவதையும் மின்னிலக்கமயமாதலைத் தழுவுவதையும் கற்றுக்கொள்ள புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சைனாடவுனில் (Chinatown) The Majestic கட்டடத்தில் அது அமைந்திருக்கிறது.
மூத்தோர் ஒன்றுகூடவும் பயிற்சி வகுப்புகளிலும் உரைகளிலும் கலந்துகொள்ளவும் மூன்று வெவ்வேறு பகுதிகளை அது கொண்டிருக்கிறது.
Majestic அறிவார்ந்த மூத்தோர் கற்றல் நிலையம் எனும் அது DBS வங்கி, foodpanda, Gojek நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கூட்டாகப் பணியாற்றி மூத்தோருக்கு உகந்த பயிற்சிகளை வழங்க தொண்டூழியர்களுக்குப் பயிற்சி வழங்குகிறது.
சிங்கப்பூரர்களுக்கு மேலும் வலுச்சேர்க்க அந்தப் புதிய முயற்சி உதவும் என நிலையத்தின் தொடக்கநிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) கூறினார்.