அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி - $1.7 மில்லியன் இழப்பு
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
சிங்கப்பூரில் பல்வேறு அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகள் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில் 1.7 மில்லியன் வெள்ளி பறிபோயிருக்கிறது.
இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து காவல்துறையிடம் அத்தகைய 6 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய வாரியம், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், Income Insurance, UnionPay ஆகியவற்றின் அதிகாரிகள் போல் நடித்து மோசடிக்காரர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
+65 அல்லது 8 என்ற எண்ணிலிருந்து மோசடிக்காரர்கள் அழைக்கலாம்.
காப்புறுதிக்கான சந்தா செலுத்தப்படாமல் இருப்பதாகவோ, காப்புறுதித் திட்டம் காலாவதியாவதாகவோ சொல்லி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நாணய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஆதாரம் : CNA