ஹோட்டல் முன்பதிவு மோசடிகள் - $185,000 இழந்த வாடிக்கையாளர்கள்
வாசிப்புநேரம் -
படம்: Singapore Police Force
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் ஹோட்டல் முன்பதிவு தொடர்பான போலி இணைய மோசடிகள் அதிகரித்துவருவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை அத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் சுமார் 185,000 வெள்ளியை இழந்துவிட்டனர்.
இதுவரை 148 மோசடிப் புகார்கள் பதிவாகியுள்ளன.
மோசடியில் ஈடுபடுவோர் பொதுவாக ஹோட்டல்கள் அல்லது முன்பதிவுத் தளங்களின் பிரதிநிதிகளைப்போல் நடித்து WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்கின்றனர்.
முன்பதிவை உறுதிப்படுத்தும்படி அல்லது வங்கி அட்டை விவரத்தைச் சரிபார்க்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
அத்தகைய மோசடித் தொடர்புகள் சிலவற்றில் உண்மையான முன்பதிவுத் தகவல்களும் இடம்பெறுவதால் அவை நம்பகமானவைபோலத் தோன்றுகின்றன.
வாடிக்கையாளர்கள் சில குறிப்பிட்ட இணையப் பக்கங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுவர். அவை போலியானவை என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.
பரிவர்த்தனையின்போது வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை விவரம் திருடப்பட்டு அனுமதியின்றிப் பணம் களவாடப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய செய்திகள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட ஹோட்டலை நேரடியாகத் தொடர்புகொண்டு அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும்படி காவல்துறை அறிவுறுத்தியது.
அறிமுகமில்லாத இணைய இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்கும்படியும் அது கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : CNA