Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரு லீ சியன் யாங் அமைச்சர்கள் திரு சண்முகம், டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 600,000 வெள்ளிக்கும் மேல் செலுத்தியுள்ளார்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் அமைச்சர்கள் திரு கா சண்முகம், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான அவதூறுக்காக அவர்கள் இருவருக்கும் திரு லீ சியன் யாங் (Lee Hsien Yang) மொத்தம் 600,000 வெள்ளிக்கும் மேல் செலுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் Ridout ரோட்டில் வாடகைக்கு எடுத்த அரசாங்க வீடுகள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததற்காக இழப்பீடு செலுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரு லீ அவதூறான கருத்துகளைத் தமது Facebook பக்கத்தில் பதிவுசெய்திருந்தார்.

திரு சண்முகமும் டாக்டர் பாலகிருஷ்ணனும் சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து முறைகேடாக அந்த பங்களாக்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்