சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"தபேலா என்றால் அது ஸாகீர் ஹுசேன் தான்...இது பேரிழப்பு"
வாசிப்புநேரம் -
தபேலா என்று சொன்னாலே ஸாகீர் ஹுசேனின் பெயர் தான் நம் நினைவுக்கு வரும்.
73 வயது திரு. ஹுசேன் நுரையீரல் பிரச்சினைகளால் காலமானார்.
இசை உலகில் பல சாதனைகளைப் படைத்த திரு ஹுசேனின் மறைவுக்குப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரின் தபேலா கலைஞர் திரு லக்ஷ்மணன் அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
தபேலா உலகில் தாம் காலடி எடுத்து வைப்பதற்கு உந்துதலாக இருந்தவர் திரு ஹுசேன் என்றார் அவர்.
ஸாகீர் ஹுசேனின் மறைவு இசை உலகிற்குப் பேரிழப்பு
"ஸாகீர் ஹுசேன் இசை உலகில் பெரும் பங்கு வகித்தவர். உலகளவில் பல இசையமைப்பாளர்களின் மனத்தில் இடம்பிடித்தவர். இந்தியப் பாரம்பரிய இசையையும் தபேலாவையும்
உலக வரைப்படத்திற்குக் கொண்டுவந்தவர். அவரது நினைவுகள் எப்போதும் நிலைத்து நிற்கும்"
தபேலா வாசிப்பதில் தனித்து நின்றவர்
திரு ஹுசேன் தபேலா வாசிப்பதில் காட்டிய ஆற்றலைக் கண்டு வியந்ததாகச் சொன்னார் திரு லக்ஷ்மணன்.
"அவருக்கு ஈடு இணை இல்லை. உலகளவில் பல புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து இசை சங்கமங்களைப் படைத்த பெருமை அவரைச் சேரும்"
உணர்வுகள் மேலோங்கப் பேசிய திரு லக்ஷ்மணன்.....
"தபேலா வாசிப்பதில் மட்டுமல்லாமல், திரு ஹுசேன் ஓர் இசைக்கலைஞராகவும் ஒரு மனிதராகவும் முத்திரை பதித்துள்ளார்," என்றார்.
தபேலா வாசிப்பதை ஒரு தொழிலாகப் பார்க்காமல் அதனை ஒரு வாழ்க்கைமுறையாகப் பார்க்கவேண்டும் என்று கற்றுத் தந்தவர் திரு ஹுசேன் என்று நெகிழ்ந்தார் திரு லக்ஷ்மணன்.