சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"நிறைய உப்பு சேர்ப்பது தப்பு" -- பண்டிகை உணவுக்குச் சுவையூட்ட வேறு வழியுண்டு: சத்துணவு நிபுணர்
பலரும் தீபாவளியன்று விதவிதமான சுவையான உணவைத் தயாரித்து அசத்தத் திட்டமிடுகின்றனர்.
"உப்பில்லாத பண்டம் குப்பையிலே" என்று நம் முன்னோர் கூறியது இன்றும் எதிரொலிக்கிறது.
ஆனால் அதிகமான உப்பை உட்கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
தீபாவளி உணவில் உப்பு அதிகம் சேர்க்காமல் இருப்பது எப்படி?
தெரிந்துகொள்ள 'செய்தி' சத்துணவு நிபுணர் திருமதி கரோலினிடம் (Carolyn Stephen) பேசியது.
தேவையானதைவிட அதிகம் உப்பு சேர்க்கப்படும் தீபாவளிப் பண்டங்கள்?
- திடீர் முறுக்கு
(திடீர் முறுக்கு மாவில் ஏற்கனவே உப்பு இருக்கும். சிலர் மேலும் உப்பு சேர்ப்பர்)
- குழம்பு, சாந்து
- சமோசா, வடை
- மோறு
உணவில் உப்பைக் குறைப்பது எப்படி?
- பன்னீர்க் கட்டிகள், டின் உணவுகள் போன்றவற்றில் ஏற்கனவே உப்பு இருக்கும். அவை சேர்க்கப்படும் உணவில் உப்பைக் குறைக்கலாம்.
- கருவாட்டுக் குழம்பைத் தயாரிக்கும்போது, கருவாட்டில் நிறைய உப்பு இருக்கிறது என்பதால் குழம்பில் குறைவான உப்பைச் சேர்க்கலாம்.
- ஊறுகாய், தயிர், அப்பளம், வத்தல் போன்றவற்றில் அதிகமான உப்பு இருக்கும். அவற்றைக் கருத்திற்கொண்டு உணவின் மற்ற அம்சங்களில் எவ்வளவு உப்பைச் சேர்க்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம்.
உப்புக்குப் பதிலாக?
- K-salt எனப்படும் பொட்டாசியம் வகை உப்பைப் பயன்படுத்தலாம்
- மாற்றுவகை உப்பைப் பயன்படுத்தும்போது உணவில் இருக்கக்கூடிய சோடியம் அளவை 30 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைக்கலாம்.
- பொட்டாசியம் உப்பைப் பயன்படுத்தும்போது, சோடியம் வகை உப்பைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய இதயம் தொடர்பான நோய்கள் நேரும் ஆபத்து குறையும் என்று கூறப்படுகிறது.
- இந்திய மூலிகைகள், மசாலா போன்றவற்றைப் பயன்படுத்தி உணவுக்குச் சுவையூட்டினால் உப்பை அதிகமாகப் பயன்படுத்தத் தேவையில்லை
(உதாரணம்: கொத்தமல்லி, சீரகம், கடுகு, மிளகு)