Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சோடியம் குறைவாக உள்ள உப்பைப் பயன்படுத்தத் தயங்கும் உணவங்காடிக் கடைக்காரர்கள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள உணவங்காடிக் கடைக்காரர்கள் சோடியம் குறைவாக உள்ள உப்பையும் சாஸ் வகைகளையும் பயன்படுத்தத் தயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அவர்களிடம் அதுகுறித்துப் பேசியும் அந்தத் தயக்கம் நிலவுவதாகத் தெரிகிறது.

சோடியம் குறைவாக உள்ள தெரிவுகளைப் பற்றிக் கடைக்காரர்களுடன் பகிர்ந்துகொள்ள அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் அனைத்து 110 உணவங்காடி நிலையங்களுக்கும் செல்லவிருப்பதாகச் சுகாதார மேம்பாட்டு வாரியம் கூறியது.

இதுவரை சுமார் 60 உணவங்காடி நிலையங்களுக்குச் சென்றுள்ளதாக வாரியம் சொன்னது.

ஒவ்வொரு நிலையத்திலும் 80லிருந்து 100 கடைகள் உள்ளன.

அவற்றில் 300 கடைகள் சோடியம் குறைவான தெரிவுகளுக்கு மாறியிருப்பதாக வாரியம் சொன்னது.

50 கடைக்காரர்களிடம் CNA நடத்திய ஆய்வில் சுமார் பாதிப்பேர் அவற்றுக்கு மாறவில்லை என்பது தெரியவந்தது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்