Skip to main content
A
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

A-Level தேர்வு முடிவுகள்: 94.2% மாணவர்களுக்குக் குறைந்தது 3 H2 பாடங்களில் தேர்ச்சி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வைச் சென்ற ஆண்டு (2024) எழுதிய மாணவர்களில் 94.2 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று H2 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்கள் General Paper எனும் பொதுத் தாள் அல்லது கல்வியறிவு, ஆய்வுத் தாளிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

2024ஆம் ஆண்டின் மேல்நிலைத் தேர்வை 10,889 மாணவர்கள் எழுதினர்.

கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள் மதிப்பீட்டுக் கழகமும் அது குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டன.

முடிவுகள் கடந்த ஆண்டுகளின் முடிவுகளோடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாய் இருப்பதாக கூறப்பட்டது.

பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்கள் இணையம் வழி விண்ணப்பிக்கலாம்.

மேல்விவரங்கள் பல்கலைக்கழகங்களின் இணையத்தளத்தில் வழங்கப்படும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்