Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழாய் பழுதுபார்ப்புப் பணியாளரைத் தேட இனி இணையவாசலை நாடலாம்!

வாசிப்புநேரம் -

குழாய் பழுதுபார்ப்புப் பணியாளரை நியமிக்க விரும்பும் நிறுவனங்கள் இனி www.singaporeplumbingsociety.org.sg இணையவாசலை நாடலாம். 

சிங்கப்பூர்க் குழாய் பழுதுபார்ப்புர் சங்கமும் பொதுப் பயனீட்டுக் கழகமும் இணைந்து புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

இன்று அறிமுகம் கண்ட இணையவாசலில் வேலைவாய்ப்புகள் முதல் பயிற்சி வகுப்புகள்வரை பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குழாய் பழுதுபார்ப்புப் பணிகளில் உரிமம் பெற்றவர்களுக்குத் தொடர்ந்து வேலைகள் இருப்பதை உறுதிசெய்வது அதன் நோக்கம். 
 
தொழில்துறையின் தரநிலையை உயர்த்தவும் அது முனைகிறது. 

புதிய இணையவாசல் அந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்கிறார் சிங்கப்பூர்க் குழாய்ப் பழுதுபார்ப்புச் சங்கத்தின் தலைவர் டிக்ரோஸ் மாசிலாமணி.

பொதுமக்கள் அவர்களுக்குத தேவைப்படும் பழுதுபார்ப்புப் பணிகளை இணையவாசலில் குறிப்பிட முடியாது. 

பழுதுபார்ப்புப் பணியாளர்களின் பட்டியலில் உரிமம் பெற்ற நிபுணரைத் தெரிவுசெய்துகொள்ளலாம். 

இன்னும் ஓராண்டில் சுமார் 1,000 உரிமம் பெற்ற பழுதுபார்ப்பவர்கள் இணையத்தளத்தில் தங்களின் சேவைகளைப் பட்டியலிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்