லிட்டில் இந்தியாவில் இன்று தீபாவளி ஒளியூட்டு
வாசிப்புநேரம் -
படம்: நீவன் பஞ்சுநாதன்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
லிட்டில் இந்தியாவில் இன்று தீபாவளி ஒளியூட்டு.
பர்ச் சாலையில் ஒளியூட்டு நிகழ்ச்சியுடன் தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்குகிறது.
சிராங்கூன் ரோட்டில் 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு விழாக்கால விளக்குகள் ஒளிரவிருக்கின்றன.
இன்றைய ஒளியூட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கலந்துகொள்கிறார்.
ஒளியூட்டைத் தொடர்ந்து பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வண்ண விளக்குகளை நவம்பர் 29ஆம் தேதி வரை கண்டு களிக்கலாம்.

தினமும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை விளக்குகள் ஒளிரும்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (LISHA) கிட்டத்தட்ட இரண்டு மாதக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டு சில புதிய முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அவற்றில் ஒன்று மெய்நிகர் மரபுடைமைச் சுற்றுலா.
சிண்டாவின் Project Give திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குத் தகவல் வழங்கும் பேருந்து ஒன்றும் இவ்வாண்டு இடம்பெறும்.
இவ்வாண்டு பல ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் முதல் முறையாகக் கர்நாடக இசைக் கச்சேரிகளும் இடம்பெறும்.
தீபாவளி வார இறுதியில் வருவதால் அதிகமான கூட்டத்தைச் சமாளிக்கக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi