Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நம்பிக்கை மோசடி, சட்டவிரோதமாகப் பின்தொடர்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக லிம் தியென் மீது குற்றஞ்சாட்டப்படும்

வாசிப்புநேரம் -

நம்பிக்கை மோசடி, சட்டவிரோதமாகப் பின்தொடர்ந்து செல்லுதல், உரிமம் இல்லாமல் வழக்கறிஞராகப் பணிபுரிதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான திரு. லிம் தியென் (Lim Tean) மீது வரும் வியாழக்கிழமை (12 மே) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை இன்று (10 மே) தெரிவித்தது.

நம்பிக்கை மோசடிக் குற்றம்:

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திரு லிம்மிடம் 30,000 வெள்ளி ஒப்படைக்கப்பட்டது.

ஒரு வாகன விபத்து வழக்கில் அவரின் முன்னாள் வாடிக்கையாளரிடம் அந்தத் தொகை வழங்கப்பட்டது.

அந்தப் பணத்தைத் திரு லிம் கையாடியதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதமாகப் பின்தொடர்ந்து சென்ற குற்றம்:

2020ஆம் ஆண்டில் திரு லிம்மின் சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரை அவர் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Carson Law Chambers நிறுவனத்தில் பணிபுரியும் திரு லிம் நம்பிக்கை மோசடிக் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 2020ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

உரிமம் இல்லாமல் வழக்கறிஞராகப் பணிபுரிந்த குற்றம்:

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 9 வரை முறையான அனுமதிச் சான்றிதழ் இல்லாமல் 66 முறை வழக்கறிஞராகத் திரு லிம் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்