Skip to main content
720 சிங்கங்களுடன் சிங்க நடனம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

720 சிங்கங்களுடன் சிங்க நடனம் - ஒரே மேடையில்..

சிங்கப்பூரின் அமைதியையும் வளப்பத்தையும் கொண்டாடும் 'Peace & Prosperity Singapura  2019' நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
720 சிங்கங்களுடன் சிங்க நடனம் - ஒரே மேடையில்..

படம்: Peace and Prosperity Singapura/Facebook

சிங்கப்பூரின் அமைதியையும் வளப்பத்தையும் கொண்டாடும் 'Peace & Prosperity Singapura  2019' நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியின்மூலம், சிங்கப்பூரர்களிடையே நிலவும் இன, சமய நல்லிணத்தைப் பற்றி மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.

கல்வியமைச்சர் ஓங் யீ காங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். 10,000 பேர் நிகழ்ச்சிக்கு வருகைபுரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம்: மரினா பே மிதக்கும் மேடை

தேதி: டிசம்பர் 21

நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

அனுமதி: இலவசம்

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இரண்டு சிங்கப்பூர்ச் சாதனைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

முதல் சாதனை: 'ஆகப் பெரிய அளவிலான சிங்க நடனம்'. 720 சிங்கங்கள் பங்கெடுக்கும் சிங்க நடனம் இடம்பெறவுள்ளது.

காரணம்: சிங்கப்பூரை சங் நீல உத்தமா 720 ஆண்டுகளுக்கு முன்னர் (1299ஆம் ஆண்டு) கண்டுபிடித்ததைக் குறிக்கும் விதமாக அந்தச் சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

இரண்டாவது சாதனை: 'ஆகப் பெரிய அளவில் சிங்கங்களுக்குக் கண் வரைவது'

காரணம்: சீனக் கலாசாரத்தில் கண்கள் ஆன்மாவைக் குறிக்கின்றன. சிங்கத்தை இறுதியாக உயிர்ப்பிக்க, அதற்குக் கண்கள் வரையப்படுவது வழக்கம். நிகழ்ச்சியில் சிவப்பு, வெள்ளை நிறங்களில் சிங்கவேடமிட்டு வரும் 600 பேருக்குக் கண்கள் வரையப்படும்.

அதுமட்டுமல்ல, 54 Lamborghini சொகுசுக் கார்களின் பவனியும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமையவிருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதியில் வாணவேடிக்கை வானை அலங்கரிக்கும்.

லாப நோக்கமற்ற அமைப்பான Tao One Ltd அதன் பங்காளிகளுடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://www.eventbrite.com/e/peace-prosperity-singapura-2019-tickets-85754613357 எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

 


மேலும் செய்திகள் கட்டுரைகள்