Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்கொழுப்பை உறிஞ்சியெடுக்கும் அறுவைச் சிகிச்சையில் ஒருவர் மரணம் - முன்னாள் மருத்துவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -

Liposuction என்றழைக்கப்படும் உடற்கொழுப்பை உறிஞ்சியெடுக்கும்  அறுவைச் சிகிச்சையில் ஒருவர் மாண்டதால் சிகிச்சை செய்த மருத்துவருக்கு 4 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வோங் மெங் ஹாங் (Wong Meng Hang) என்ற அந்த 46 வயது முன்னாள் மருத்துவர் அறுவைச் சிகிச்சையில் சரிவரத் திட்டமிடாமல் செயல்பட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 

2009ஆம் ஆண்டில் Reeves மருந்தகத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றது. 

44 வயது ஃபிராங்க்லின் ஹெங் (Franklin Heng Ang Tee) என்பவருக்கு சிகிச்சையின்போது ஆழ்ந்த மயக்கநிலையை ஏற்படுத்தும் Propofol மருந்தைச் செலுத்தும்படி வோங் சொன்னார்.

திரு ஹெங்கிற்குத் டாக்டர் ஸு சியூ சுன் (Zhu Xiu Chin) என்பவரிடம் தேவையான அளவைவிட மிக அதிகமான மயக்கமருந்து செலுத்தும்படிச்  சொன்னதை வோங் ஒப்புக்கொண்டார். 

திரு ஹெங்கைச் சரிவரக் கண்காணிக்காததையும் வோங் ஒப்புக்கொண்டார். 

அதிகளவில் மயக்கமருந்து அளிக்கப்பட்டதால் திரு ஹெங்கால் சுயமாக மூச்சு விடமுடியவில்லை. மூச்சுத் திணறலால் அவர் மாண்டதாகப் பிரேதப் பரிசோதனை முடிவில் குறிப்பிடப்பட்டது. 

Propofol மயக்கமருந்தைச் செலுத்துவதற்குத் தேவையான பயிற்சியை வோங், டாக்டர் ஸு ஆகியோர் இருவரும் மேற்கொள்ளவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்