Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் தொடரும் தீபாவளிக் குதூகலம்... 60 வகை பிரியாணியைச் சமைத்து அசத்தும் வல்லுநர்கள்

வாசிப்புநேரம் -
லிட்டில் இந்தியாவில் தொடரும் தீபாவளிக் குதூகலம்... 60 வகை பிரியாணியைச் சமைத்து அசத்தும் வல்லுநர்கள்

படம்: தமிழவேல்

வெளியீடு : 25 Oct 2025 04:57PM புதுப்பிப்பு : 25 Oct 2025 05:42PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லிட்டில் இந்தியாவில் இன்று பிரியாணி மணம் கமழ்கிறது.

காரணம் ?

தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக இன்று பல பிரியாணி வகைகளை மக்கள் ரசித்து ருசித்துப் பார்க்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

60 நிமிடங்களில் 60 வகை பிரியாணி வகைகளைச் சமைக்க சமையல் வல்லுநர்கள் கூடியிருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்காக கிளைவ் ஸ்ட்ரீட் (Clive Street) திறந்தவெளி சமையல் அறையாக மாறியது.

அரிசி, மாமிசம், காய்கறிகள் எனக் கிட்டத்தட்ட மொத்தம் 150 கிலோ பிரியாணி விருந்து.

இத்தாலிய ரிசோட்டோ பாணியிலிருந்து கொரிய காரக்கோழி பாணி வரை பல நாடுகளின் உணவு பாணியிலும் பிரியாணி வகைகள் சமைக்கப்படுகின்றன.

அந்த நிகழ்வு உணவைப் பற்றியது மட்டுமல்ல, மக்களை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்டது என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் லிஷா எனும் லிட்டில் இந்தியக் கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் கூறுகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்