கனத்த மழைக்கு இடையே பொங்கல் ஒளியூட்டு
வாசிப்புநேரம் -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பல பகுதிகளில் இன்று (10 ஜனவரி) காலையிலிருந்து விடாமல் மழை பெய்கிறது.
லிட்டில் இந்தியா வட்டாரமும் மழையில் நனைந்தவாறே பொங்கலை வரவேற்றது.
கிளைவ் ஸ்ட்ரீட்டில் (Clive Street) நடந்த நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவர் பொங்கல் ஒளியூட்டைக் குத்துவிளக்கு ஏற்றி அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
தொடர்புடையவை:
ஆதாரம் : Mediacorp Seithi