சிங்கப்பூர் exclusive
"காலஞ்சென்ற நடிகர் ஜெயராமன் இணையற்ற அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்"
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காலஞ்சென்ற பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயராமன்
பல்வேறு நாடகங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த கலைஞராவார்.
2018ஆம் ஆண்டிற்கான பிரதான விழாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
அவருடன் பணியாற்றிய உள்ளூர்க் கலைஞர் திரு வடிவழகன், அவருடைய அர்ப்பணிப்புக்கு ஈடுஇணையில்லை என்று புகழ்ந்தார். விபத்து ஒன்றில் காயமுற்றபோதும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டதைத் திரு வடிவழகன் நினைவுகூர்ந்தார்.

வயது முதிர்ந்த நிலையிலும் படப்பிடிப்பு எவ்வளவு மணிநேரம் தொடர்ந்தாலும் அவர் உற்சாகம் இழந்து பார்த்ததில்லை என்று குடும்பம் United நகைச்சுவை நாடகத் தொடரில் அவருடன் நடித்த திரு ஜெயகணேஷ் சொன்னார்.
திரு ஜெயராமன் மேடை நாடகங்களை ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் எப்படிச் சிறப்பாக வழங்கலாம் என்று தமக்குத் தெரிந்த யோசனைகளை மனதார பகிர்வார் என்றார் அவாண்ட் நாடகக் குழுத் தலைவரும் உள்ளூர்க் கலைஞருமான திரு செல்வா.
அவர் இளம் கலைஞர்களுக்கு எப்போதும் ஊக்கம் தரும் குணம் படைத்தவர் எனவும் திரு செல்வா குறிப்பிட்டார்.
சிறுவர்களுடன் இணைந்து நடிக்கும்போது பிள்ளைகளுடன் அவர் ஒன்றி நடிக்கும் தன்மையை மிகவும் ரசித்ததாகக் கூறினார் திருமதி பிரேமா சுரேஷ்.
சிங்கப்பூர் நாடக நடிகர்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பவர்களில் திரு ஜெயராமன் முக்கியமான இடத்தைப் பெற்றவர் என்றார் திருமதி பிரியா.