காமன்வெல்த் போட்டியில் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி!
வாசிப்புநேரம் -
படம்: Commonwealth Games Singapore/Lim Weixiang
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காமன்வெல்த் (Commonwealth) போட்டியில், சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா (Shanti Pereira) 100 மீட்டருக்கான தகுதிச்சுற்றில் முதல் இடத்தில் வந்தார்.
அவர் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுகிறார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.24 விநாடி.
இதற்குமுன் Asian Athletics Championships போட்டியில் அவர் 11.20 விநாடிகளில் ஓடிமுடித்து தேசியச் சாதனை படைத்திருந்தார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
வரும் புதங்கிழமை (29 ஜூலை) ஓட்டப்பந்தயத்தின் 100 மீட்டர் அரை இறுதிப்போட்டி நடைபெறும்.
ஆண்கள் பிரிவில், ஓட்டப்பந்தய வீரர் மார்க் பிரையன் லூயிஸ் (Marc Brian Louis) 10.38 விநாடிகளில் ஓடிமுடித்தார்.
ஆனால் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி் பெறத் தவறினார்.
நெடுந்தொலைவு நீச்சல் வீராங்கனை கான் சிங் ஹுவீ (Gan Ching Hwee) முதல்முறையாக நடத்தப்படும் 1,500 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் கலந்துகொண்டார்.
ஆனால் பதக்கத்தைத் தவறவிட்டார்.
ஆண்களுக்கான 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் வீரர் மிக்கேல் லீ (Mikkel Lee) போட்டியிட்டார்.
அவர் எட்டாவது நிலையில் போட்டியை முடித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi