Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் லோ கியென் யூ

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் லோ கியென் யூ

(படம்: Singapore Badminton Association)

வெளியீடு : 31 May 2026 10:24AM புதுப்பிப்பு : 31 May 2026 12:33PM

சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு உள்ளூர் ஆட்டக்காரர் லோ கியென் யூ (Loh Kean Yew) முன்னேறியிருக்கிறார்.

லோ சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை.

ஜப்பானின் கோக்கி வட்டானாபேயை (Koki Watanabe) அரையிறுதிச் சுற்றில் தோற்கடித்து லோ இறுதிச்சுற்றுக்குச் செல்கிறார்.

ஆட்டம் சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது.

செட் விவரம் 21க்கு 15, 15க்கு 21, 21க்கு 9.

28 வயது லோ இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் அலெக்ஸ் லானியரைச் (Alex Lanier) சந்திப்பார்.

லானியர் உலகத் தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ளார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்