Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர்ப் பொதுவிருதுப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்ட லோ கியன் யூ

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ப் பொதுவிருதுப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்ட லோ கியன் யூ

(படம்: CN-STR/AFP)

வெளியீடு : 01 Jun 2026 09:42AM புதுப்பிப்பு : 01 Jun 2026 01:51PM

பேட்மிண்டன் வீரர் லோ கியன் யூ (Loh Kean Yew) சிங்கப்பூர்ப் பொதுவிருதுப் போட்டியில் வெற்றியைக் கைப்பற்றத் தவறிவிட்டார்.

இறுதியாட்டத்தில் அவர் பிரான்ஸின் அலெக்ஸ் லானியருடன் (Alex Lanier)  மூன்று செட்களில் கடுமையாகப் போராடினார்.

60 ஆண்டு வரலாற்றில் பொதுவிருதுப் போட்டியில் இறுதியாட்டம் வரை சென்ற மூன்றாவது சிங்கப்பூரர் லோ.

1962இல் வீ சூன் செங் (Wee Choon Seng) பொதுவிருதை வென்றார். அதன்பிறகு 2002இல் ரோனல்ட் சுசிலோ (Ronald Susilo) இறுதியாட்டம் வரை சென்றார்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் இறுதிப்போட்டி வரை சென்ற லோவை Facebook பதிவில் பாராட்டியிருக்கிறார்.

வளரும் சுவர்ப்பந்து (squash) நட்சத்திரம் கரீனா சஷிகுமாரையும் அதிபர் பாராட்டினார்.

ஃபேரர் பார்க் (Farrer Park ) தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த கரீனா, சீனாவில் நடைபெற்ற ஆசிய இளையர் போட்டியில் பட்டத்தை வென்றுள்ளார்.

அந்தப் பட்டத்தை வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையையும் தேடித் தந்திருப்பதை அதிபர் பாராட்டினார்.

அடுத்து அவரது ஒலிம்பிக் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Others/Social media

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்