சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
நீண்டகாலம் வேலை பார்க்கும் தாதியருக்கு $100,000 ரொக்கம்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நீண்டகாலம் வேலை பார்க்கும் தாதியருக்கு அரசாங்கம் ரொக்கத் தொகை வழங்கவிருக்கிறது.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு 100,000 வெள்ளி கொடுக்கப்படும்.
சுமார் 30,000 தாதியர் புதிய திட்டத்தால் பயனடைவர்.
ஏஞ்சல் (Angel) என்பது திட்டத்தின் பெயர்.
46 வயதுக்குக் குறைவானவர்களும் புதிதாக வேலையில் சேரும் தாதியரும் 4 முதல் 6 ஆண்டுக்கு ஒருமுறை பணம் பெறுவர்.
ஒவ்வொரு முறையும் 20,000 முதல் 30,000 வெள்ளி வழங்கப்படும்.
குறைந்தது நாலாண்டுக் காலம் பணிபுரிந்த வெளிநாட்டு ஊழியர்களும் பணம் பெறுவர்.
அதிகக் காலம் சேவையாற்ற முடியாத மூத்த தாதியர், குறைந்தது அடுத்த ஐந்தாண்டு வேலை பார்த்தால் 5,000 முதல் 15,000 வெள்ளி வரை பெறுவர்.
தாதியரைப் போலவே சுகாதாரத் துறையைச் சேர்ந்த மற்றவர்களும் கவனிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கூறினார்.