CTE சுரங்கப்பாதையில் $1.4 மில்லியன் சேதம் ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
படம்: Singapore Police Force
மத்திய விரைவுச்சாலையின் (Central Expressway-CTE) சுரங்கப்பாதையில் 4.5 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்ட லாரியை ஓட்டிச்சென்று சேதத்தை ஏற்படுத்தியதாக 55 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
சம்பவம் சென்ற ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடந்தது.
அவர் ஓட்டிச்சென்ற லாரி உயர வரம்புத் தடுப்பு மீது மோதியதால் கடும் சேதம் ஏற்பட்டது என்று புலனாய்வு கூறுகிறது.
சுரங்கப்பாதையிலிருந்த மின்சாரச் சாதனங்கள் சேதமடைந்தன.
இதனால் 1.4 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.
ஓட்டுநர் அதே நாளில் கைதானார்.
அவர் ஏற்கனவே இதே போன்று உயர வரம்பை மீறி வாகனத்தை ஓட்டிச் சேதம் ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.
4.5 மீட்டர் உயர வரம்பை மீறி கனரக வாகனமோட்டிய குற்றத்துக்கு ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத்தண்டனையும் கூடியபட்சம் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
கனரக வாகனத்தை ஓட்டி ஏதாவது கட்டடம் மீது மோதி சேதம் ஏற்படுத்தினால் அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம், ஈராண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
4.5 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான கனரக வாகனங்களை ஓட்டும்போது காவல்துறை அல்லது துணைக் காவல்துறையின் பாதுகாப்பு அவசியமாகும்.

ஆதாரம் : CNA