Skip to main content
M1
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

M1-Simba உடன்பாடு கைவிடப்படும் : கெப்பல்

வாசிப்புநேரம் -
M1-Simba உடன்பாடு கைவிடப்படும் : கெப்பல்

படம்: TODAY/Nuria Ling

M1 நிறுவனத்தை விற்பதற்கு Simbaவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு கைவிடப்படும் என்று கெப்பல் (Keppel) தலைமை நிர்வாக அதிகாரி லோ சின் ஹுவா (Loh Chin Hua) அறிவித்திருக்கிறார்.

விற்பனை குறித்த மறுஆய்வு நிறுத்திவைக்கப்படுவதாக முன்னதாகத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) தெரிவித்திருந்தது. 

அதனையடுத்து உடன்பாட்டைக் கைவிட முடிவெடுத்திருப்பதாகக் கெப்பல் தெரிவித்தது.

மே 21ஆம் தேதியுடன் அது காலாவதியாகும். 

ஆணையத்தின் பரிசீலனையையும் அதன் முடிவையும் மதிப்பதாகக் கெப்பல் நிறுவனம் கூறியது. 

இதற்கிடையே, பங்குச் சந்தையில் கெப்பல் நிறுவனப் பங்குகளின் மதிப்பு சுமார் 2 விழுக்காடு சரிந்தது. பின்னர் அந்த இழப்பு 4 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்