Skip to main content
கருக்குழாய்வாய்ப் புற்றுநோய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கருக்குழாய்வாய்ப் புற்றுநோய் - பரிசோதனைக்குச் செல்ல ஊக்குவிக்கும் புதிய கூட்டு முயற்சி

வாசிப்புநேரம் -
கருக்குழாய்வாய்ப் புற்றுநோய் - பரிசோதனைக்குச் செல்ல ஊக்குவிக்கும் புதிய கூட்டு முயற்சி
படம்: Envato Elements
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலாய் முஸ்லிம் சமூகத்தில் மகளிர் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மூன்று முக்கிய மலாய் முஸ்லிம் அமைப்புகள் கூடுதல் முயற்சிகளை எடுத்துள்ளன.

MESRA, MENDAKI, MUIS எனும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் ஆகியவற்றின் கூட்டமைப்பு M3 என்று அழைக்கப்படுகிறது.

ஜூரோங், சுவா சூ காங் வட்டாரங்களின் M3 குழுக்கள் பள்ளிவாசல்களுடன் இணைந்து முயற்சிகளை வழிநடத்தின.

அதன்கீழ் கருக்குழாய்வாய்ப் (cervix) புற்றுநோய்ப் பரிசோதனை பற்றி விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது.

சுகாதாரக் கலந்துரையாடல்கள், நடவடிக்கைகள் ஆகியவை மூலம் பெண்களை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல ஊக்குவிப்பது நோக்கம்.

M3 குழுக்கள் இளையர்கள் வழிநடத்தும் Alliance for Active Action Against HPV (A4HPV) எனும் கருக்குழாய்வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான குழுவுடனும் இணைந்து செயல்படுகின்றன.

பரிசோதனைக்குச் செல்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து A4HPV ஆய்வு நடத்தத் திட்டமிடுகிறது.

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் குணமடைய அதிக வாய்ப்புண்டு. எனினும் குறைவானவர்களே பரிசோதனைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்