Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நன்கொடையாக வரும் காய்கறிகளை வசதி குறைந்தவர்களுக்குக் கொடுத்து மகிழும் 70 வயது வீரம்மா

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் 70 வயது திருவாட்டி வீரம்மா.

வாசிப்புநேரம் -
நன்கொடையாக வரும் காய்கறிகளை வசதி குறைந்தவர்களுக்குக் கொடுத்து மகிழும் 70 வயது வீரம்மா

படங்கள்: Facebook/ Tan See Leng

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் 70 வயது திருவாட்டி வீரம்மா.

ஏதோ ஒரு வகையில், வசதி குறைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று எண்ணிய அவர், நன்கொடையாக கிடைக்கும் காய்கறி, உணவுப் பொருள்களைத் தேவையுள்ள மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.

மரீன் டெர்ரஸ்ஸில் உள்ள புளோக்-16 இல் வசிக்கிறார் திருவாட்டி வீரம்மா.

3 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வட்டாரத்தில் உள்ள பலருக்கு உணவுப் பொருள்களைத் தந்து உதவியுள்ளார்.

திருவாட்டி வீரம்மாவின் உதவிப்பயணம் எப்படித் தொடங்கியது, யாரெல்லாம் அவருக்கு உதவுகிறார்கள் என்பதைப் பற்றி "செய்தி" அவரிடம் கேட்டறிந்தது.

எப்படித் தோன்றியது இந்த எண்ணம்?

நான் வசதியான குடும்பத்தில் இருந்து வரவில்லை, அதனால் குடும்பத்திலுள்ள நிதிச் சிரமங்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

Related article image
படங்கள்: Facebook/ Tan See Leng

யாரெல்லாம் நன்கொடை தருகிறார்கள் ?

Related article image

எப்போதெல்லாம் உணவுப்பொருள்களை விநியோகிப்பீர்கள் ?

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்று காய்கறிகள் எடுத்து வருவோம்.

அன்று காலையில் இருந்து மக்கள் என் வீட்டிற்கு வந்து அவர்களுக்கு வேண்டியதை இலவசமாக எடுத்துக் கொள்வார்கள்.

சிலர் என் வீட்டிற்கே வந்து முட்டை, ரொட்டி, மிட்டாய்கள் எனப் பல்வேறு உணவுப் பொருள்களை நன்கொடையாகத் தருவார்கள்.

உணவுப்பொருள்கள் வருவது பற்றிப் புதன்கிழமை குடியிருப்பாளர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவோம்.

Related article image

யாரெல்லாம் உங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் ?

Related article image

ஏதேனும் சவால் உள்ளதா?

முதலில் புளோக்கின் கீழேதான் உணவுப்பொருள்களை வைத்து விநியோகிப்பேன். ஆனால் COVID-19 காரணமாக சுமார் 2 மாதங்கள் யாருக்கும் உணவுப்பொருள்கள் வழங்கவில்லை.

Related article image

அதனால், மிகவும் வருத்தமாயிருந்தது. COVID-19 நோய்த்தொற்றால் வசதி குறைந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் வீட்டுக்கு முன்னால் இருக்கும் இடத்தில் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டுகளை பின்பற்றி உணவுப்பொருள்களை மீண்டும் விநியோகிக்கத் தொடங்கினோம்.

மக்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் வந்து காய்கறிகளை எடுத்துச் சென்றதைப் பார்க்க மனநிறைவாக இருந்தது.

Related article image

பொதுமக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...?

முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் அதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்றார் வீரம்மா.

திருவாட்டி வீரம்மாவின் தன்னலம் பாராத பணியை மெச்சி, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) Facebook பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.   

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்