Skip to main content
ரிவர் வேலி ரோட்டில் சிறுமி மாண்ட சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ரிவர் வேலி ரோட்டில் சிறுமி மாண்ட சம்பவம் - பணிப்பெண் வழக்கு ஆரம்பம்

வாசிப்புநேரம் -
ரிவர் வேலி ரோட்டில் நான்கு வயதுச் சிறுமி விபத்தில் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் பணிப்பெண்ணின் வழக்கு விசாரணை இன்று தொடங்கியிருக்கிறது.

33 வயது இந்தோனேசியப் பணிப்பெண் லிலியானா ஏவா (Lilyana Eva) அலட்சியமாக இருந்து சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார்.

லிலியானா குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று முன்னரே தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு (2024) ஜனவரி 23ஆம் தேதி Institution Hill ரோட்டில் சம்பவம் நடந்தது.

சாலையைக் கடக்கும்போது சிறுமியின் கையை லிலியானா பிடித்துக்கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டு.

சிறுமி ரோட்டில் ஓடியபோது கார் அவரை மோதியது. விபத்துக்குள்ளான சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மாண்டது பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

காரை ஓட்டிய 40 வயது ஆஸ்திரேலியப் பெண் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் லிலியானாவுக்கு மூன்று மாதம் வரையிலான சிறை, 1,500 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்