Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதலாளியின் 70 வயது மாமியாரைப் பணிப்பெண் கொலை செய்ததாகத் தீர்ப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மியன்மார் பணிப்பெண் அவரது முதலாளியின் 70 வயது மாமியாரைக் கொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

22 வயது சின் மார் நுவேயை (Zin Mar Nwe) மறுபடியும் முகவரிடம் திருப்பி அனுப்பப்போவதாக மூதாட்டி மிரட்டியதால் பணிப்பெண் அவரைக் கொலைசெய்ததாக நீதிபதி ஆண்ட்ரே மணியம் (Andre Maniam) தமது தீர்ப்பில் கூறினார்.

2018ஆம் ஆண்டில் கொலைச் சம்பவம் நடந்தது.

அந்தப் பணிப்பெண்ணுக்கு அப்போது 17 வயது.

சுயநினைவு இல்லாத நிலையில் அந்தப் பணிப்பெண் மூதாட்டியைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.

என்ன நடந்தது?

அந்த மூதாட்டி மகனுடன் ஒரு மாதம் வசிப்பதற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

பணிப்பெண்ணுக்கும் மூதாட்டிக்கும் சண்டை மூண்டபோது அவரை மறுநாள் முகவரிடம் அனுப்பப்போவதாக மூதாட்டி கூறினார்.

பின்னர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டியைப் பணிப்பெண் 26 முறை கத்தியால் குத்தினார்.

பணிப்பெண் அவரது பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

சுமார் 5 மணி நேரத்துக்குப் பிறகு முகவரிடம் சென்று கடப்பிதழைக் கேட்டார்.

அங்கு அவர் கைதுசெய்யப்பட்டார்.

கடன் பிரச்சினையை எதிர்நோக்கியிருந்த பணிப்பெண் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் கொலை செய்திருக்கலாம் என்று நீதிபதி கூறினார்.

தண்டனை பின்னர் நிர்ணயிக்கப்படும்.

கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.
ஆதாரம் : CNA/wt(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்