Skip to main content
97 வயது முதியவரைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

97 வயது முதியவரைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

வாசிப்புநேரம் -
97 வயது முதியவரைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

படம்: கோப்புப் படம்/State Courts in Singapore

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் முதியவரை மோசமாக நடத்திய பணிப்பெண்ணுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதியவருக்கு வயது 97. அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்; சக்கரநாற்காலியில் இருக்கிறார்.

பணிப்பெண் இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் (Siti Nurhayati Marwi Animan).

அவர் 2019ஆம் ஆண்டு முதல் முதியவரைப் பராமரித்தார்.

2025இல் முதியவரின் உடலில் தினமும் புதிய காயங்கள் ஏற்பட்டிருந்ததை அவரது பேரன் கவனித்தார்.

அது குறித்துக் கேட்டபோது முதியவர் கீழே விழுந்துவிட்டார், சுவற்றில் மோதினார் என்றெல்லாம் சித்தி காரணம் கூறினார்.

சித்தி முதியவரைத் துன்புறுத்துவதாக அவரது பேரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவர் வீட்டில் கண்காணிப்புக் கேமராவைப் பொருத்தினார்.

முதியவரின் முகத்தையும் அந்தரங்க இடங்களையும் சித்தி தாக்கியது கேமராவில் பதிவானது.

வீட்டு வேலைகளுக்கு இடையே முதியவரைப் பராமரிப்பது அசதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியதாக சித்தி கூறினார்.

முதியவருக்கு மறதி நோய் இருந்ததால் அவரால் சம்பவங்களை நினைவுபடுத்திப் புகார் கொடுக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்