ஓய்வுநாளில் வேறு வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் அபராதம்
வாசிப்புநேரம் -
CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கடந்த நான்கு ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக ஓய்வுநாள்களில் மற்றுமொரு வீட்டில் வேலைசெய்த பணிப்பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது.
பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 53 வயது பிடோ எர்லிண்டா ஒகாம்பொவுக்கு (Pido Erlinda Ocampo) 13,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது பகுதி-நேரச் சேவைகளை நாடிய 64 வயது சிங்கப்பூரர் சோ ஒய் பெக்கிற்கு (Soh Oi Bek) 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தை மீறியதாகப் புகார் கிடைத்தவுடன் மனிதவள அமைச்சு சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கியது.
எர்லிண்டா சட்டவிரோதமாக வெவ்வேறு வீடுகளில் வேலை செய்ததால் அவர் மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.
சோவின் பரிந்துரையின்படி அவர் இன்னொரு வீட்டிலும் வேலை பார்த்தது தெரியவந்தது.

ஆதாரம் : CNA