சிங்கப்பூரில் வேலை செய்யும் பணிப்பெண்கள் - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: TODAY/Najeer Yusof)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக ஓய்வுநாள்களில் வேறொரு வீட்டில் வேலைசெய்த பணிப்பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 4 ஆண்டாகப் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 53 வயது பிடோ எர்லிண்டா ஒகாம்பொ (Pido Erlinda Ocampo) அவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவருக்கு 13,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது சேவைகளை நாடிய பெண்ணுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பணிப்பெண்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
மனிதவள அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது...
- பணிப்பெண்ணாக வேலை செய்ய வருவோர் உரிய வேலை அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.
- மனிதவள அமைச்சிடம் தெரிவிக்கப்பட்ட முதலாளியின் முகவரியில் மட்டுமே வேலை செய்யலாம்; மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்யக்கூடாது.
- வீட்டு வேலைகளைத் தவிர்த்து வேறு வேலைகளைச் செய்யக்கூடாது.
-முதலாளிகள் தங்களின் பெற்றோர் அல்லது பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள உறவினர் வீட்டிற்குப் பணிப்பெண்ணை அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டால் மனிதவள அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
-அவ்வாறு செய்யும் முன் முதலாளிகள் பணிப்பெண்ணிடம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெறவேண்டும்.
-இரு வீட்டு வேலைகளையும் பணிப்பெண்ணைச் செய்ய வைக்கக் கூடாது; அங்கு தங்க வேண்டியிருந்தால் முதலாளிகள் உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். பணிப்பெண்ணின் பாதுகாப்புக்கு முதலாளியே பொறுப்பு.
-மற்றவர் வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்களின் சேவையை நாடுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.