மலேசியா எல்லை மீண்டும் திறப்பு - 5 மாதங்களுக்குப் பின் வீடு திரும்ப ஆனந்தக் கண்ணீருடன் காத்திருக்கும் மலேசியர்கள்
சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் இன்று மீண்டும் திறப்பதை முன்னிட்டு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கூட்டம் அதிகாலையிலிருந்துத் திரளத் தொடங்கியது. முன்பதிவு செய்த சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் எல்லையைக் கடக்க அனுமதி கிடைத்தது. அவர்கள் இன்று (ஆகஸ்ட் 17) காலை 7 மணியிலிருந்து அங்கு கூடத் தொடங்கினர்.

இரு நாடுகளுக்கு இடையே எல்லைகள் மூடப்பட்டதால், சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் சிலர் ஐந்து மாதங்கள் கழித்து வீடு திரும்புகின்றனர். எல்லைகள் திறக்கக் காத்திருக்கும் வேளையில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்ததைக் கண்டது 'செய்தி'.

-முகழரசன்

நான் இப்போது 4 மாத விடுப்புக்குச் செல்கிறேன். மீண்டும் திரும்பும்போது நான் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
MyPass அட்டை வழியாகச் செல்வதால் நான் தனிமைப்படுத்தப்படுவேனா என்பது சரியாகத் தெரியவில்லை...
சுசிலா, சிங்கப்பூரில் பணிபுரியும் தாதி
நான் 3 வார விடுப்பில் செல்கிறேன். என் நிறுவனம் கொடுத்த கடிதத்தைப் பயன்படுத்திச் செல்கிறேன். சிங்கப்பூருக்குத் திரும்பும்போது மீண்டும் எனக்கு என்ன செய்வேண்டும் என்ற விவரங்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.
திலகவதி, சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்.