Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிகமான பூச்சிகள்... யீஷூனிலுள்ள Malaysia Chiak! உணவங்காடி நிலையத்தின் உரிமம் 2 வாரத்துக்கு ரத்து

வாசிப்புநேரம் -
அதிகமான பூச்சிகள்... யீஷூனிலுள்ள Malaysia Chiak! உணவங்காடி நிலையத்தின் உரிமம் 2 வாரத்துக்கு ரத்து

(Facebook/Malaysia Chiak, Northpoint City)

யீஷூனிலுள்ள Northpoint City கடைத்தொகுதியின் Malaysia Chiak! உணவங்காடி நிலையத்தின் உரிமம் 2 வாரத்துக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. 

அங்குப் பெரியளவில் பூச்சிகள் காணப்பட்டதால் உணவங்காடி நிலையத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டது. 

ஒரே ஆண்டில் 12 குற்றப்புள்ளிகள் கிடைத்ததால் Malaysia Chiak! உரிமையாளருக்கு 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

பூச்சிகள் இல்லாமல் உணவங்காடி நிலையத்தைச் சுத்தமாக வைத்திருக்க 2 முறை தவறியதால் Malaysia Chiak! 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றது. 

உணவங்காடி நிலையத்தில் எத்தகைய பூச்சிகள் இருந்தன என்பது குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு தகவல் வெளியிடவில்லை. 

ஒரே ஆண்டுக்குள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட குற்றப்புள்ளிகள் பெறும் கடையின் உரிமம் 2 அல்லது 4 வாரம் ரத்துசெய்யப்படலாம். அல்லது உரிமம் மீட்டுக்கொள்ளப்படலாம். 

Malaysia Chiak! அடுத்த மாதம் நாலாம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். 

கடையில் உணவைக் கையாளும் ஊழியர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பில் முதல் நிலைப் பயிற்சியை மீண்டும் மேற்கொண்டு தேறிய பிறகே வேலையைத் தொடரமுடியும். 

உணவங்காடி நிலையத்தின் உணவுச் சுகாதார ஊழியர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பில் மூன்றாம் நிலைப் பயிற்சிளை மீண்டும் முடித்துத் தேர்ச்சிபெற்றிருப்பதை உரிமையாளர் உறுதிசெய்ய வேண்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa