Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாட்டின் மற்ற சுல்தான்களை இன்று சந்திக்கும் மலேசிய மாமன்னர்

வாசிப்புநேரம் -

மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா நாட்டின் மற்ற சுல்தான்களை இன்று (24 நவம்பர்) சந்திக்கிறார்.

பெரும்பாலான மலேசிய சுல்தான்கள் இஸ்தானா நெகாரா (Istana Negara) அரண்மனையைச் சென்றடைந்தனர்.

பேராக் (Perak), சிலாங்கூர் (Selangor), திரெங்கானு (Terengganu), கெடா (Kedah), பெர்லிஸ் (Perlis), பஹாங் (Pahang), நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) ஆகிய மாநிலங்களின் மன்னர்கள் ஏற்கனவே அங்கு சென்றுள்ளனர்.

சந்திப்பு சுமார் 3 மணிநேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மலேசியாவின் ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் (Anthony Loke), கபுங்கான் பார்ட்டி சரவாக் (Gabungan Parti Sarawak) தலைவர் அபாங் ஜொஹாரி ஆபாங் ஓபெங்குடன் (Abang Johari Abang Openg) பேச கூச்சிங் (Kuching) நகருக்குச் செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வளர்க்க, இந்தச் சந்திப்பு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன் வழி மேம்பட்ட, முற்போக்கான மலேசியாவை உருவாக்க முடியும் என்று திரு. லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் நடந்து 5 நாள்கள் ஆகிவிட்டன.

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் இழுபறி இன்னும் தொடர்கிறது.

மாமன்னர் ஏனைய சுல்தான்களைச் சந்தித்துச் பேச்சுநடத்தி  அந்த நிலைக்குத் தீர்வுகாணப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்