Skip to main content
மலேசியப் பிரதமர் அன்வார் நாளை சிங்கப்பூருக்கு வருகை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலேசியப் பிரதமர் அன்வார் நாளை சிங்கப்பூருக்கு வருகை

வாசிப்புநேரம் -
மலேசியப் பிரதமர் அன்வார் நாளை சிங்கப்பூருக்கு வருகை
கோப்புப் படம்: CNA/Fadza Ishak
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் 12ஆவது சந்திப்பு நாளை இடம்பெறவிருக்கிறது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாளை சிங்கப்பூருக்கு வருகையளிக்கிறார்.

இருதரப்பு ஒத்துழைப்பு, புதிய அம்சங்களில் கூட்டு முயற்சி, இருநாட்டு அரசதந்திர உறவை முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டிகள் ஆகியவை குறித்துத் தலைவர்கள் பேச்சு நடத்துவர்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் அரசந்திர உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

நாளை பிரதமர் வோங் திரு அன்வாருக்கு மதிய விருந்தளித்துச் சிறப்பிப்பார்.

பிறகு இருதரப்பின் பேராளர்களுடன் சந்திப்பு நடக்கும்.

ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், RTS Link சேவை, புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது முதலியன குறித்து அவர்கள் கலந்துபேசுவர்.

இளையர்கள், விளையாட்டு, சுகாதாரம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்களில் 3 ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படும்.

தண்ணீர், ஆகாயவெளி, கடல் எல்லைகள் முதலிய விவகாரங்கள் குறித்து உயர்நிலையில் கலந்துரையாடல்களை நடத்தவும் சந்திப்பு வழிவகுக்கும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்