Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியா செல்ல ஆவலுடன் காத்திருக்கும் சிலர்... தயங்கும் சிலர்... பயண ஏற்பாட்டின் விரிவாக்கத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர்?

"வெளிநாட்டுக்குச் சென்று ஈராண்டுகள் ஆகிவிட்டன!"

வாசிப்புநேரம் -

வெளிநாட்டுக்குச் சென்று ஈராண்டுகள் ஆகிவிட்டன!

எனப் பலரும் புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தரைவழிப்பயண ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் திங்கட்கிழமையிலிருந்து ( டிசம்பர் 20 )தரைவழிப் பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூர்க் குடிமக்கள் மலேசியாவிற்குச் செல்லலாம்; மலேசியக் குடிமக்கள் சிங்கப்பூருக்கு வரலாம்.

பயண ஏற்பாட்டின் விரிவாக்கத்தை மக்கள் வரவேற்கின்றனரா? உடனடியாக மலேசியா செல்லத் தயாராகிறார்களா?

தெரிந்துகொள்ள, முன்பு மலேசியாவுக்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்த சிலரிடம் பேசியது, செய்தி...

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

உடனடியாக இல்லை... அடுத்த மாதம் மலேசியா செல்வேன்

என்றார் திரு ஜெகநாத் ராமானுஜம். பிறருடன் பேருந்தில் மலேசியாவுக்குச் செல்வதைத் தவிர்க்க முனையும் அவர், தமது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யவிருப்பதாகக் கூறினார்.

அந்த ஒரு மாதம் எதற்கு என்று கேட்டபோது....

பிறர் இந்த ஏற்பாட்டில் செல்லும்போது எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டு கவனித்த பின்னர், நான் மலேசியா செல்வதற்கு ஏற்பாடு செய்வேன்

என்றார் அவர்.

தற்போதைய நிலையில் நான் மலேசியாவுக்கு என் குடும்பத்தினரை அழைத்துச் செல்லமாட்டேன்.

என்றும் அவர் குறிப்பிட்டார்.

படம்: AFP/Roslan Rahman

(படம்: AFP/Roslan Rahman)

அடுத்த வாரமே மலேசியா செல்லத் திட்டமிட்டுள்ளேன்

என்றார் திருவாட்டி செல்வராணி ராஜன்.

அவரது தூரத்துச் சொந்தக்காரர்களைச் சந்திக்க மிக ஆவலுடன் இருப்பதாகத் திருவாட்டி செல்வராணி செய்தியுடன் பகிர்ந்தார்.

அவரும் அவரது கணவரும் கூடுதல் தடுப்பூசி போட்டுவிட்டதால் பயமின்றி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முனைகின்றனர்.

இருப்பினும் மலேசியாவுக்குச் சென்றதும் அங்கு நடப்பில் இருக்கும் அனைத்துப் பாதுகாப்பு விதிகளையும் அவர்கள் பின்பற்றுவர் என்று திருவாட்டி செல்வராணி உறுதி கூறினார்.

(படம்: Bernama) 

(படம்: Bernama) 

இருமுறை தடுப்பூசி போட்டுவிட்டேன்... ஆனால் பயம் இருக்கத்தான் செய்யும்

என்றார் குமாரி உமா ரகுபதி.

அவர் மலேசியாவுக்கோ மற்ற வெளிநாட்டுக்கோ அரை ஆண்டு கழித்த பின்னர் செல்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

கிருமிப்பரவல் சூழலில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மற்றவர்களையும் சூழ்நிலையையும் அவர் கவனிப்பதாகச் சொன்னார்.

(படம்: AFP/Roslan Rahman)

(படம்: AFP/Roslan Rahman)

நான் என் அம்மாவுடன் மலேசியாவுக்குச் சில வாரம் கழித்துச் செல்லத் திட்டமிட்டுள்ளேன்

என்றார் திரு பிரகாஷ் சந்திரன்.

மலேசியரான அவரது தாயாரை முன்னதாகத் தனியாக மலேசியாவுக்கு அனுப்ப அவர் விரும்பவில்லை.

பயண ஏற்பாட்டின் விரிவாக்கத்தின் மூலம் அவருடன் சேர்ந்துசெல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆனால் சில வாரங்களுக்குச் சூழ்நிலையைக் கவனித்து, பின்னர் பயணம் மேற்கொள்ளத் திரு பிரகாஷ் முடிவெடுத்தார்.

அவருக்கும் அவரது தாயாருக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று குறித்து அவ்வளவாகப் பயம் இல்லை என்று அவர் சொன்னார்.

பல நாள்களுக்குப் பின் மீண்டும் மிக அருகில் இருக்கும் மலேசியாவுக்காவது பயணம் செய்யலாம் என்று நினைக்கும் சிலர் ஒருபக்கம் இருக்கிறார்கள்... நோய் தொற்றிவிடும் என்று பயப்படும் சிலர் மறுபக்கம் இருக்கிறார்கள்...

நீங்கள் எப்படி?  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்