Skip to main content
சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா? - பாலர்பள்ளி ஆண் ஆசிரியர்கள் சிலரின் தயக்கம்

வாசிப்புநேரம் -
பாலர்பள்ளி ஆசிரியர்கள்..

பெற்றோருக்கு அடுத்துப் பிள்ளைகள் அதிக நேரம் இருப்பது அவர்களோடுதான்.

பாலர்பள்ளி ஆசிரியர்கள் என்று சொல்லும்போது பொதுவாக நம்முடைய நினைவிற்கு வருவது பெண்கள்தான்.

ஆனால் அந்தத் துறையில் ஆண்களும் இருக்கின்றனர்.

தற்போது சிங்கப்பூரின் பாலர்பள்ளிகளில் 217 ஆண் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

சிங்கப்பூரின் பாலர்பள்ளி ஆசிரியர்களின் மொத்த ஊழியரணியில் அது 1 விழுக்காட்டுக்கும் குறைவு.

"ஆண் ஆசிரியர்கள் சிலருக்குத் துறையில் சேர ஆர்வம் இருக்கும். ஆனால் சமுதாயம் என்ன சொல்லும்? அதை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விகளும் குழப்பங்களும் எழும். அதனால்தான் பலர் இந்தத் துறையில் சேரத் தயங்குகின்றனர் என்று நான் நினைக்கிறேன்," என்று 6 ஆண்டாக PCF Sparkletots பாலர்பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் திரு தினேஷ் கூறினார்.

 
படம்: முகமது இம்ரான்
எனினும் பலரின் ஊக்கம் பாலர்பள்ளித் துறையில் சேர உந்துதலாய் இருந்ததாக அவர் சொன்னார்.

பிள்ளைகளைக் கழிவறைக்குக் கொண்டுசெல்வது..

அவர்களுக்குத் துணி மாற்றுவது..

போன்ற சில பணிகளைப் பெண் ஆசிரியர்களால் மட்டும் செய்ய முடியும்.

கனமான பொருள்களைத் தூக்குவது, பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது போன்ற மற்ற வேலைகளை ஆண் ஆசிரியர்கள் கொஞ்சம் அதிகமாகச் செய்வது உண்டு என்று 10 ஆண்டாக My First Skool பாலர்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் திரு. குமரன் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் பாலர்பள்ளித் துறையில் பணிபுரிவதற்கு ஆர்வமும் பொறுமையும் இருந்தால் போதும் என்கின்றனர் ஆண் ஆசிரியர்கள்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்