Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"அந்தக் காலத்துப் பெண்ணைப் போல நடித்தது மறக்க முடியாத அனுபவம்" - 'The Last Bout' நடிகை மாலினி

வாசிப்புநேரம் -
'Rojak', '128 Circle' போன்ற ஆங்கில நாடகத் தொடர்களில் நடித்துள்ள நடிகை மாலினி வாட்டர்ஸுக்கு (Malene Waters) ஆங்கிலத்தில் பேசி நடிப்பது ஒன்றும் புதிதல்ல.

தமிழ், ஆங்கில நாடகத் தொடர்களில் நடிக்கும் கதாபாத்திரத்துக்குத் தயார் செய்வதில் மட்டும்தான் வித்தியாசம் உள்ளதாகச் சொன்னார் அவர்.
(படம்: Mediacorp)
மீடியாகார்ப் தயாரிப்பில் வெளிவந்த 'The Last Bout' எனும் ஆங்கில நாடகத் தொடரில் அந்தக் காலத்தைச் சேர்ந்த அன்னா (Anna) எனும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவர்.

அத்தகைய கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடிப்பது இது முதல் முறை.

1930களில் லூயிஸ் (Louis), டாமி (Tommy) எனும் இரு நண்பர்களின் குத்துச் சண்டைப் பயணத்தை மையமாகக் கொண்டு 'The Last Bout' தொடரின் கதை அமைந்துள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் டாமி (Tommy) எனும் சீன ஆடவரைக் காதலிக்கும் ஆங்கிலோ இந்தியர் (Anglo Indian) அன்னா.
(படம்: Mediacorp)
அந்த நேரத்திலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண் கதாபாத்திரத்துக்குத் தயார் செய்ய பல முயற்சிகளை எடுத்ததாகச் 'செய்தி'இடம் கூறினார் மாலினி.

1930களில் ஆங்கிலோ இந்தியப் பெண்களின் பண்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ததாகச் சொன்னார் மாலினி.

ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தக் காலக்கட்டத்திலும் சுதந்திரமாகச் செயல்படும் பெண்ணாக அன்னாவைப் பிரதிபலிக்கவேண்டும்; இரக்கம், கருணை ஆகிய பண்புகளையும் வெளிக்காட்டவேண்டும்.
(படம்: Mediacorp)
இரண்டுக்கும் சமநிலையைக் கொண்டுவர உழைத்ததாகச் சொன்னார் மாலினி.

காதலில் அன்னா சந்தித்த இன்னல்கள், அது எழுப்பிய உணர்வுகளைத் துல்லியமாகச் சித்திரிக்கத் தம்முடன் நடித்தவருடன் இணைந்து பயிற்சி செய்ததாகவும் அவர் கூறினார்.

மாறுபட்ட பின்னணிகளில் இருந்து வந்த நடிகர்களுடன் நடித்த அனுபவம் மறக்கமுடியாதது என்றார் அவர்.

படப்பிடிப்புக்குக் கோலாலம்பூருக்குச் சென்று 1930களைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் இடங்களில் நடித்தது அந்த அனுபவத்தை மேலும் இனிமையாக்கியது என்றும் கூறினார் மாலினி.

'The Last Bout' நாடகத் தொடரை MeWatch தளத்தில் காணலாம். ஒளிவழி 5இல் திங்கட்கிழமை இரவு 10 மணிக்குத் தொடரின் புதிய அத்தியாயங்களைக் காணலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்