யீசூன் வீட்டுக்கு வெளியே பாடினார் - குற்றம் நிரூபிக்கப்பட்டது
வாசிப்புநேரம் -
படம்: CNA/Ooi Boon Keong
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அண்டைவீட்டார் தமக்கு எதிராகப் பெற்ற அவசரப் பாதுகாப்பு உத்தரவை ஆடவர் மீறியது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் 69 வயது ஹெங் சூ ஹுவி (Heng Choo Hwi).
அவர் வீட்டுக்கு வெளியே பாடியதாகவும் உலோகப் பொருள்களை வைத்துச் சத்தம் ஏற்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது.
யீஷூன் ஸ்ட்ரீட் 51, புளோக் 513Cஇல் ஹெங் வசிக்கிறார்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஹெங்கின் அண்டைவீட்டார் அவருக்கு எதிராகப் பாதுகாப்பு உத்தரவைப் பெற்றனர்.
அதன்படி அவர் பக்கத்து வீட்டுக்கு அருகே பாடக்கூடாது; வேண்டுமென்றே அதிக சத்தம் எழுப்பக் கூடாது.
ஹெங் உத்தரவை மீறி சுமார் 11 நிமிடங்களுக்குச் சத்தம் ஏற்படுத்தினார்; பாடினார் என்று கண்டறியப்பட்டது.
ஹெங் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு வெளியே தாம் விருப்பப்பட்டதைச் செய்யச் சுதந்திரம் இருக்கிறது என்று அவர் சொன்னார்.
உத்தரவைப் படிக்கவில்லை என்று ஹெங் நீதிமன்றத்தில் கூறினார்.
உத்தரவைப் பழைய செய்தித்தாளுடன் ஒரு கூடையில் வைத்ததாகவும் நகரமன்றம் அதை நீக்கியதாகவும் அவர் சொன்னார்.
மாவட்ட நீதிபதி ஹெங்கின் வாதங்களை நிராகரித்தார்.
வழக்கு தண்டனைக்காக அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
அவசரப் பாதுகாப்பு உத்தரவை மீறிய குற்றத்திற்கு அதிகபட்சம் ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA