Skip to main content
கத்தியைக் காட்டி மிரட்டி ஆள்கடத்தல்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கத்தியைக் காட்டி மிரட்டி ஆள்கடத்தல்? - நால்வர் கைது

வாசிப்புநேரம் -
கத்தியைக் காட்டி மிரட்டி ஆள்கடத்தல்? - நால்வர் கைது

(படம்: Singapore Police Force)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தடை செய்யப்பட்ட ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ஆள்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் ஆண்கள், இருவர் பெண்கள்.

பிடிபட்டவர்கள் 30 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கான்பரா ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் நேற்று தகராறு நடந்தது.

சிக்கிய 38 வயது ஆடவர் பாராங் கத்தியை வைத்து ஓர் ஆடவரை மிரட்டியதாகத் தெரிகிறது.

பின்னிரவு 1.55 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

கார் வாடகை தொடர்பாகச் சண்டை ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

மிரட்டப்பட்ட ஆடவரின் காரில் பிடிபட்ட ஆடவர்கள் ஏறினர்.

38 வயது ஆடவர் காரை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்றார்.

கார் எங்கு இருக்கிறது என்று காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

காவல்துறையினரைப் பார்த்ததும் 38 வயது ஆடவர் காரில் தப்ப முயன்றார்.

காவல்துறை அதிகாரிகள் துரத்தியபோது மின் கம்பத்தில் கார் மோதியது.

36 வயது ஆடவர் காரில் இருந்து இறங்கி தப்பிச் சென்றார்.

சம்பவ இடத்தில் 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

பாராங் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

கூடுதல் விசாரணை மூலம் 36 வயது ஆடவரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

38 வயது ஆடவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்